பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிசென்ற புகையிரதம் தடம்புரள்வு

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

நானுஓயா மற்றும் பெரக்கும்புர ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 130 மைல்கள் இடத்தில் இன்று குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

இதனால், மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் புகையிரதம் நானுஓயா புகையிரத நிலையம் வரையும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் அம்பேவெல புகையிரத நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புகையிரத பாதையை சீரமைத்து வருவதாகவும், இரவு நேரத்திற்குள் பாதையை சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் எனவும் நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Latest Offers