கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!!

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா – எல முதல் கட்டுநாயக்க வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீதுவ – கெலாபத பகுதியில் பரவும் தீ காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவாயிலூடாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஜா-எல நுழைவாயிலூடாக பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீதுவ பகுதியின் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் ஒழுங்கைக்கு அருகிலுள்ள கெலாபத பகுதியில் தீ பரவியுள்ளது.

சீதுவ தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் அதிவேக வீதியின் குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...