கொழும்பில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

Report Print Ajith Ajith in போக்குவரத்து

கொழும்பில் வாகன நெரிசல் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் போக்குவரத்து பொலிஸாருக்கு உதவியாக இன்று முதல் இராணுவ பொலிஸார் (மிலிட்டரி பொலிஸ்) செயற்படவுள்ளனர்.

இந்த தகவலை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொழும்பின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களில் இருந்து செயற்படவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் கட்டளையின்படி இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிகாரிகளை சந்தித்த கோட்டாபய ராஜபக்ச போக்குவரத்து நெரிசல் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்தே பொலிஸாரின் உதவிக்காக இராணுவ பொலிஸாரும் இணை கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.