இலங்கையில் முதலாவது மின்சார ரயில் கடவையை அமைக்க திட்டம்!

Report Print Ajith Ajith in போக்குவரத்து

இலங்கையில் முதலாவது மின்சார ரயில் கடவையை கண்டியில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகருக்கும் அதன் பிரதேசங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை குறைக்கும் வகையில் இந்த சேவை நடத்தப்படவுள்ளது.

கண்டியில் இன்று அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.

இதன்படி புதிய மின்சார ரயில் திட்டம் - ரம்புக்கன, கடுகண்ணாவைக்கு இடையில் செயற்படுத்தப்படவுள்ளது.

பின்னர் கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கட்டுகஸ்தோட்டைக்கு இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது

இந்தநிலையில் இந்த சேவை நாவலப்பிட்டிய, கடுகண்ணாவ கம்பளை ஆகிய இடங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கண்டியின் குட்செட் பேருந்து தரிப்பிடம் வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

இதன்போது தலதா மாளிகையையும் கட்டுகஸ்தோட்டையையும் தொடர்புபடுத்தும் வகையில் ரயில் பாதை அமைக்கப்படவுளளது. இந்த ரயில்வே திட்டத்தை ஸ்பெய்ன் நிறுவனம் ஒன்று மேற்கொள்ளவுள்ளது