சில நாடுகளுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Report Print Ajith Ajith in போக்குவரத்து

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடொன்றுக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது.

அந்த வகையில் குவைத்துக்கான விமான சேவைகளையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை அடுத்து குவைத் இலங்கை உட்பட்ட 6 நாடுகளின் விமான சேவைகளை இடைநிறுத்தியது.

இதனையடுத்தே எதிர்வரும் 12ஆம் திகதி வரை குவைத்துக்கான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.