ஐக்கிய இராச்சியம், நோர்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் நாளை முதல் ரத்து

Report Print Sujitha Sri in போக்குவரத்து

ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமான சேவைகள் நாளைய தினம் முதல் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலகில் பல நாடுகள் கொரேனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஸ்தம்பித்துள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கையிலும் இதுவரையில் 18 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.