கொழும்பு, கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாடு பூராகவும் பகுதியளவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மே மாதம் 26ஆம் திகதி முதல் மீள் அறிவிப்பு வரை தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

26ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹாவை மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து சேவை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.