இரண்டு மாதங்களில் புகையிரத திணைக்களத்திற்கு 900 லட்சம் ரூபாய் நஷ்டம்

Report Print Steephen Steephen in போக்குவரத்து

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் 900 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

புகையிரத்தில் பயணிப்பதற்காக விநியோகிக்கப்படும் பருவச்சீட்டுகள் கடந்த இரண்டு மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது குறைவான புகையிரதங்களே சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் போதிய வருமானம் கிடைப்பதில்லை எனவும் பிரதி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.