கொழும்பில் நாளை முதல் அமுலாகும் நடைமுறை! பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Ajith Ajith in போக்குவரத்து

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து உந்துருளிகளின் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் நாளை இடது பாதை அல்லது பேரூந்து முன்னுரிமை பாதையை மட்டுமே பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட வீதி ஒழுங்கைச் சட்டத் திட்டத்திற்கு ஏற்ப கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு பரிசோதனையாக இது நாளை ஆரம்பிக்கப்படும் என்று மேல் மாகாண மூத்த டி.ஐ.ஜி தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

உந்துருளிகளின் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் எந்தவொரு சாலை ஒழுக்கத்தையும் பின்பற்றவில்லை என்பதை காவல்துறை கவனித்துள்ளனர்.

இந்தநிலையிலேயே நாளை கொழும்புக்குள் பிரவேசிக்கும் உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் வீதியின் இடதுப்பக்க ஒழுங்கையை அல்லது பேரூந்து ஒழுங்கையை பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒழுங்கைககளில் பேரூந்துகள் பயணிகளை ஏற்றிக்கொள்வதற்காக நிறுத்தப்படும்போது சற்று தாமதம் ஏற்படும்.

இருப்பினும், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பேருந்துகளைப் பின்தொடர்ந்து பொறுமையுடன் வாகனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்வதாக தேசப்பந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்