கனரக வாகன சாரதி உரிமங்களுக்கு சிறுநீர் பரிசோதனை கட்டாயம் - அரசாங்கம் அறிவிப்பு

Report Print Murali Murali in போக்குவரத்து

கனரக வாகனம் அல்லது வணிக வாகன சாரதி உரிமங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மது அல்லது மது அல்லாத போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய சிறப்பு சிறுநீர் பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர் ஏதேனும் ஆல்கஹால் உட்கொண்டுள்ளாரா என்பதை அறிய சோதனைச் சாவடிகள் அல்லது சாலைத் தடைகளில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை ஓட்டுபவர்கள் மது அல்லாத போதைப்பொருகளை பயன்படுத்துவதாக மக்களிடமிருந்து எங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஒரு நபர் ஆல்கஹால் அல்லாத போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் சாதாரண ஆல்கஹால் சோதனைகள் வெளிப்படுத்தாது. எனவே, சிறப்பு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும், ”என்று அமைச்சர் கூறினார்.

புதிய சோதனையானது, நபர் எந்தவொரு மது அல்லாத போதைப்பொருளையும் உட்கொண்டுள்ளாரா என்பது பரிசோதனையின் போது மட்டுமல்ல, முந்தைய மாதங்களிலும் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் காட்டும்.

இதற்கிடையில், கனரக வாகனம் அல்லது வணிக வாகன வாரதி உரிமங்களைப் பெறுவதற்கான செலவைக் குறைக்க போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.