கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியாது என அமைச்சர் அறிவிப்பு!

Report Print Vethu Vethu in போக்குவரத்து

சுகாதார பிரிவினால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கும் வரை கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இரகசியமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் கடற்படையினரால் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் என்பது இதுவரையில் சிறப்பான ஒரு நிலைமையில் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.