கொழும்பில் அமுலாகவுள்ள Park and drive நடைமுறை

Report Print Vethu Vethu in போக்குவரத்து

கொழும்பில் Park and drive நடைமுறையை அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மாகும்புர, மஹரகம உட்பட பல பகுதிகளை அடிப்படையாக கொண்டு அடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மோட்டார் வாகனத்தில் வருபவர்கள் அதனை ரயில் நிலையத்திற்கு அருகில் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்த முடியும். அதன் பின்னர் அங்கிருந்து பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த நடைமுறையை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.