மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Ajith Ajith in போக்குவரத்து
296Shares

எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் சேவைகளில் இருந்து விலகியிருக்கப் போவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னர் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமார தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை அடுத்து தனியார் பேருந்துகள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த நிலையில் டீசல் மானியத்தை தரவேண்டும் அல்லது பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் நீண்ட குத்தகை மற்றும்நிதி வசதிகளைப் பெற்றே பேருந்துகளை கொள்வனவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட கால குத்தகை நிறுவனங்கள் மேலும் 6 மாதங்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அரசாங்கம் பதில்கள் எதனையும் இதுவரை தரவில்லை. இதன்காரணமாக எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி முதல் நாடளாவிய சேவைகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமார அறிவித்துள்ளார்.