புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்

Report Print Vethu Vethu in போக்குவரத்து
281Shares

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் புறக்கோட்டையில் இருந்து பயணிக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இன்று ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கோட்டை, புறக்கோட்டை உட்பட பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து போக்குவரத்து தொடர்பில் நாளைய தினம் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு கோட்டையில் ஊரடங்கு காரணமாக, காலிக்கான இன்றைய இரவு அஞ்சல் புகையிரதம் தவிர ஏனைய பகுதிகளுக்கான இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.