சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து கொள்வதற்கான சலுகைக் காலம் நீடிப்பு

Report Print Kamel Kamel in போக்குவரத்து
101Shares

சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து கொள்வதற்கான சலுகை காலம் மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நோய்த் தொற்று காரணமாக சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவி வரும் கொவிட் நோய்த் தொற்று பரவுகை நிலமையினால் தவணைக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியானவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்தால் அவ்வாறான சாரதிகள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.