புகையிரத இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இந்த பணிப்புறக்கணிப்பானது, மஹவ மற்றும் ஓமந்தைக்கு இடையிலான புகையிரத வழித்தடத்தை, இரட்டை வழித்தடங்களாக சீரமைக்கும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பிற்கு புகையிரத கட்டுப்பாட்டு சேவை உள்ளிட்ட 19 தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட புகையிரத பயணிகள் அனைவரும் இதனால் சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.