கிண்ணியா கொழும்பு பிரதான வீதிக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்த கோரிக்கை!

Report Print Samaran Samaran in போக்குவரத்து

கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியில் அமைந்திருக்கும் கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்துள்ளது.

அதனைத் திருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதால் அதற்கு பதிலாக மாற்று பாதைகளை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து காணப்படுகிறது.

அதனால் மோட்டார் சைக்கிள்,துவிச்சக்கர வண்டி,முச்சக்கர வண்டி போன்ற சிறியரக வாகனங்களைத் தவிர ஏனைய கனரக வாகனங்கள் பேருந்துகள் என்பன பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் கிண்ணியா கொழும்பு பிரதான வீதி வழியாக திருகோணமலை,மூதூர்,கிண்ணியா போன்ற கொழும்பு பேருந்துகள் பயணிக்கின்றன.

எனவே பாலத்தின் திருத்த வேலை முடிவடையும் வரை மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.