இலங்கை மீது இவ்வளவு காதலா? மெய்சிலிர்க்க வைக்கும் வெளிநாட்டவரின் செயற்பாடு

Report Print Vethu Vethu in சுற்றுலா

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் இலங்கையில் செய்யும் சேவை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

தனது சொந்த பணத்தை செலவழித்து அருகம்பே கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

தனது பணியை திறம்பட செய்து முடிக்க மேலும் சில பணியாளர்களை ஈடுபடுத்தி வருகிறார் இதன்மூலம் கடற்கரை மிகவும் அழகாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

காலையிலேயே பணியை ஆரம்பிக்கும் குறித்த வெளிநாட்டவர், கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அதற்காக இலங்கை பணியாளர்களை பணிக்கு ஈடுபடுத்துவதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த திருமணமாகாத ஒருவராகும். இலங்கை மக்களுடன் நீண்ட நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளமையினால் ஓரளவு சிங்களம் மொழி பேசுவதற்கும் அவர் பழகியுள்ளார்.

கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் தனியாக அவர் இலங்கைக்கு வந்துள்ளார். வந்தவர் இலங்கையின் அழகில் ஈர்ப்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் இலங்கையில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளார். இலஙகையில் கேஸ் நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராக பணியில் இணைந்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அருகம்பே கடலுக்கு விளையாட வந்தவர் அங்கு சொந்த பணத்தை முதலீடு செய்து ஹோட்டல் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

பின்னர் இவ்வளவு அழகான நாட்டின் கடல் அசுத்தமாக இருப்பது குறித்து வருத்தமடைந்தவர் அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார். அதற்காக 14 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளார். அவர்களுக்கு வாராந்தம் 800 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளார்.

வாரம் ஒரு முறை குறித்த கடற்கரையை அவர் அன்று முதல் சுத்தம் செய்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers