வெளிநாட்டில் மனைவி! மஹிந்த பேரணியில் உயிரிழந்தவர் தமிழரா? பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சுற்றுலா

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட போது உயிரிழந்தவர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் பாரிய பேரணி ஒன்றினை நேற்று நடத்தியிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட ஹட்டன் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

39 வயதான ஜகத் விமலசூரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் ஹட்டன் - கொழும்பு தனியார் பேருந்தின் நடத்துனராக செயற்பட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பேரணிக்கு தனது நண்பர்களுடன் வருகை தந்துள்ளார். மாளிகாவத்தை வரை பேருந்தில் வந்தவர் பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நடந்து சென்றுள்ளார்.

இதன்போது அவர் தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், மீண்டும் பேருந்திற்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.

மாலை 6.15 மணியளவில் மீண்டும் பேருந்தில் நண்பர் சோதனையிடும் போதும், குறித்த நபர் பேருந்து ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரது மனைவி பணிப்பெண்ணாக வெளிநாட்டில் பணி செய்து வருகின்றார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் 5 வயதான சிறுமி ஒருவரும் உள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே பேரணியில் கலந்து கொண்ட நிலையில் உயிரிழந்தவர் ஒரு தமிழர் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பொலிஸார் முழுமையான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Latest Offers