சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Report Print Murali Murali in சுற்றுலா

கடந்த மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மொத்தமாக இரண்டு லட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை ஐந்து சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்களாவர். சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers