இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் விசித்திர செயல்

Report Print Sinan in சுற்றுலா

இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களின் செயற்பாடுகள் குறித்து தினமும் பல செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

வீதியை சுத்தம் செய்தல், கடற்கரையை சுத்தம் செய்தல், ஆலயங்களை சுத்தம் செய்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பல செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் அண்மையில் நுவரெலியாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் செயல் குறித்து அதிகம் பேசப்படுகின்றது.

இவர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர்.

அங்கு வேலை செய்யும் மக்களிடம் இருந்து அவர்களின் கூடைகளை வாங்கி தாம் போட்டுக் கொண்டு, கொழுந்து பறித்துள்ளனர்.

ஆண்கள் பெண்கள் என அனைவரும் மிகவும் விருப்பத்துடன் கொழுந்து பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers