இலங்கை வரும் வெளிநாட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தயாராகும் இலங்கை

Report Print Vethu Vethu in சுற்றுலா

சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழு பில்லியன் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் தற்சமயம் மூன்று தசம் ஐந்து பில்லியன் டொலர்களாகும். சுற்றுலாத்துறை மூலமான தொழில் வாய்ப்புக்களை ஆறு லட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணி ஒருவரின் நாளாந்த செலவினத்தை 210 டொலர்கள் வரை அதிகரிப்பது இலக்காகும். இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கான சுற்றுலா மூலோபாய செயற்றிட்டம் ஒன்று அமுலாகிறது. இதன் கீழ், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா அனுபவமும் அதிகரிக்கும்.