இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா கால எல்லை நீடிப்பு

Report Print Vethu Vethu in சுற்றுலா

48 நாடுகளுக்காக வழங்கப்பட்டிருந்த இலவச விசா நடைமுறையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்காக இலவச விசா வழங்கப்பட்ட நிலையில், கடந்த 31ஆம் திகதியுடன் அந்த நடைமுறை நிறைவுக்கு வரவிருந்தது.

எனினும் அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த விசா நடைமுறை முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஜேர்மன், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து உட்பட 48 நாடுகளுக்கு இந்த இலவச விசா வசதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.