2019ம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

Report Print Ajith Ajith in சுற்றுலா

இலங்கைக்கு கடந்த வருடத்தில் 1.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதில் ஏப்ரல் மாத குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் 241 ஆயிரத்து 663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 2018ம் ஆண்டு 2,333,796 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.இதனுடன் ஒப்பிடும் போது 2019 இன் சுற்றுலா பயணிகளின் வருகையில் 18.0 வீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.