இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

Report Print Kamel Kamel in சுற்றுலா

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வோருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டுக்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது ஐந்து நாட்கள் தங்கியிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் வரவேற்பதற்கு இலங்கை ஆயத்தமாகி வருகின்றது.

அனைத்து நாடுகளையும் சேர்ந்த அனைத்து வயது மட்டத்தினரையுடை உடையவர்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் மூலம் வீசா பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறைந்தபட்சம் 30 நாட்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரையில் வீசா காலம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலத்திற்குள் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தி அதன் அறிக்கையை சுற்றுலாப் பயணிகள் எடுத்து வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.