சுற்றுலா பயணிகளுக்காக இன்று முழுமையாக திறக்கப்பட்ட இலங்கை! கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம்

Report Print Vethu Vethu in சுற்றுலா
2045Shares

கொவிட்19 வைரஸ் பரவல் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் இன்றையதினம் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

முதலாவது விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று முதல் வழமை போன்று அனைத்து நாடுகளிலிருந்தும் விமானங்கள் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் கண்டறிய சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட அதிகாரிகள் குழுவொன்று நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் சுகாதார வசதி மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறும் முறை தொடர்பில் அமைச்சர் உட்பட குழுவினர் கண்கானித்துள்ளனர்.

சுற்றுலா பணிகள் மற்றும் நாட்டு மக்களும் எந்த வகையிலும் தொடர்புபடாத வகையில் செயற்பாடுகள் அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.