பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கிறார் டேவிட் கமரூன்!

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் ஒக்ஸ்போர்ட்ஷயர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் திரேசா மேயின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறாக இருக்க விரும்பாத காரணத்தாலேயே தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பழமைவாதக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள் முரண்பாடுகள் காரணமாகவே மேவிட் கமரூன் பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதா அல்லது விலகுவதா என பொது மக்கள் வாக்கெடுப்பை கடந்த ஜூன் மாதம் டேவிட் கமரூன் நடத்தியிருந்தார்.

எனினும், நீடிக்க வேண்டும் நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், தனது நிலைப்பாட்டை அடைய முடியாத நிலையில் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், டேவிட் கமரூன் பதவி விலகுவதை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்ஷயர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தல் பிரதமர் திரேசா மேயின் கொள்கைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் அபிப்பிராயத்தை பிரதிபலிக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments