120,000 பேர் மரணமும்..! புதிய அரசியல் மாற்றமும்..! பரபரப்பாகும் பிரித்தானியா

Report Print Murali Murali in பிரித்தானியா
306Shares

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என வாக்களித்தவர்கள் சுமார் 120,000 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பின் போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என 51.89 வீத மக்கள் வாக்களித்திருந்தனர்.

எனினும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என 48.11 வீத மக்கள் விருப்பம் தெரிவித்து வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானிய பிரதமராக இருந்த டேவிட் கெமரூன் பதவி விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என வாக்களித்தவர்களில் 120,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என வாக்களித்தவர்களில் 29 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில் உயிரிழந்தவர்களின் அனைவரினதும் எண்ணிக்கையை கழித்து தற்போது இருப்பவர்களை கொண்டு பார்க்கும் போது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என வாக்களித்தவர்களின் வீதம் 52.08 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள தகவலின் அடிப்படையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய அரசியலில் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments