ஈழத்தமிழருக்கான சிறப்பு மாநாடு பிரித்தானிய பாராளுமன்றில்!

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானம் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பிலும் காத்திரமான கலந்துரையாடல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கடந்த (5)ம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் Senior Vice Chair – APPG Tamil Hon. Siobhain McDonagh MP ( Mitcham and Morden ) – Labour, Hon. Anne McLaughlin MP Political Education ,Convener – Glasgow, North East – Scottish , National Party (SNP) ஆகியோர் கலந்து ஆதரவளித்ததுடன் சிறப்புரையாற்றினர்.

தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உதவிப்பிரதமரும் கல்வித்துறை அமைச்சருமான தவேந்திரா (USA), வெளிவிவகாரத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர் (AUS), மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் (UK), விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் யோகலிங்கம் (UK) ஆகியோர் கருத்துரையாற்றியதுடன், அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பாலச்சந்திரன் (FRANCE), மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்பநலன் பேணல் அமைச்சர் யோ அந்தனி (CAN), நாடுகடந்த அரசாங்கத்தின் பெருமளவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களின் தீவிர செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்த அதேவேளை

“அகதிகள் உரிமைகள்” அமைப்பின் பிரதிநிதிகள், சீக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழர்களுக்கான தகவல் நிலையத்தின் (Tamil Information Centre - TiC) பிரதிநிதிகள், நாடுகள் அற்ற தேசம் (Nations without States - NwS) அமைப்பின் பிரதிநிதிகள், சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமைப்பின் (Victims of torture) பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் என பெருமளவானோர் கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்தனர்.

2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு சிறப்பான கருத்துக்களையும் ஆதாரங்களையும், முன்வைப்பதற்கு இவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதுவாக அமையும் என பெருமளவான செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments