அவதிக்குள்ளாகியுள்ள பிரித்தானிய மக்கள்..! காரணம் என்ன..?

Report Print Murali Murali in பிரித்தானியா
789Shares

பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பல மில்லியன் பொது மக்கள், அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று காலை குறித்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் போக்குவரத்துளை மேற்கொள்வதில், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தது என தெரிவிக்கபட்டுள்ளது.

பிரித்தானியாவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களால் நான்கு மில்லியன் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது !

பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதனால் சுமார் நான்கு மில்லியன் பொதுக்கள் அவதியுறும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஒப்பந்தங்கள் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேண்டுகோள்கள் தொடர்பில் பிரதமர் தெரேசா மே அக்கறை செலுத்தத் தவறியுள்ளார் என்பதோலேயே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டன் நிலத்தடி ரயில் சேவை ஊழியர்கள் சுமார் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் இதனால் லண்டனின் பெரும்பாலான பகுதிகளின் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) சதேர்ன் புகையிரத சேவை ஓட்டுனர்களும் மூன்று நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால், எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லையென்றும் மாறாக பயணிகளுக்கு கஷ்டங்களும் இடையூறுகளுமே உண்டாகும் எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த ரயில்வே ஆர்.எம்.டீ யூனியன் தெரிவித்திருந்தது.

மேலும், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான பணியாளர்களும் நாளை முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை பொதுமக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments