பிரித்தானிய மக்களே அவதானம், அதிகரிக்கும் வாகன கட்டணம்:

Report Print Vino in பிரித்தானியா
381Shares

பிரித்தானியாவில் தற்போது போக்குவரத்து கட்டணமும், வாகனத்தினை நிறுத்துவதற்காக அறவிடப்படும் கட்டணமும் அதிகளவில் அறவிடப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் அடிப்படையில் பிரித்தானியாவில் உள்ள இரயில் நிலையத்திற்கு முன்பாக மக்கள் தமது வாகனத்தினை நிறுத்த வேண்டுமாயின் வாரம் ஒன்றிக்கு ஒருவர் இலங்கை மதிப்பில் 20828 ரூபா செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நூலகங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தினால் 4368 ரூபாவும், பிரித்தானியாவில் புகழ்பெற்ற சவுதம்டன் விமான நிலையத்தில் 2764 ரூபாவும், பிரிக்ட்டன் விமான நிலையத்தில் 2414 ரூபாவும் வாகன தரிப்பிற்காக அறவிடப்படுகின்றது.

மேலும் புகையிரத கட்டணங்கள் ஆரம்பத்தினை விட 2.3 சதவீதமாக தற்போது அதிகரிக்கப்பட்டதினால் புகையிரதம் மூலம் லண்டனுக்கு சென்று வர ஒரு வாரத்திற்கு 63 ஆயிரத்து 221 ரூபா செலவாகிறது என அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவின் பல பாகங்களில் இந்த கட்டணம் உயர்வடைந்தமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments