லண்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!

Report Print Murali Murali in பிரித்தானியா
3504Shares

லண்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் நகர மேயர் இந்த அவசர எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளார்.

லண்டன் நகரில் அதிகரித்துள்ள நச்சு காற்று காரணமாக இவ்வாறு பொது சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டன் நகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து காரணமாக உயர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது எதிர்வரும் மூன்று நாட்களில் அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு லண்டன் நகர மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என லண்டன் நகர மேயர் வலியுறுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த எச்சரிக்கையானது அனைத்து வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுற்று சூழல் துறையினர், இவ்வாறான நிலையில் கண் எரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் பாதிப்புடையவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

கூடிய மட்டும் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பில் பிரச்சினை உள்ளவர்கள் வெளியில் செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments