ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவரா? பிரித்தானியாவின் நிரந்தர வதிவுரிமை குறித்த முக்கிய தகவல்

Report Print Shalini in பிரித்தானியா
1382Shares

பிரித்தானியா உள்விவாகார அமைச்சு EEA நாட்டவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது வரி வருமானத் திணைக்களத்தினுடைய (HMRC) Primary Earning Threshold அடிப்படையிலேயே விண்ணப்பங்களை தீர்மானிக்கின்றது.

EEA நாட்டைச் சேர்ந்தவர்கள் இதற்கு குறைவான வருமானத்தைப் பெற்றிருந்தால் அவர்களுடைய வருமானச் செயற்பாடுகளைப் பற்றி அது உண்மையானதா மற்றும் பயனுள்ளதா என்று உள்விவகார மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று அவர்களுடைய புதிய Guidance தெரிவிக்கின்றது.

ஐக்கிய இராச்சியத்தில பிரித்தானிய சட்டத்தின் கீழ் உள்ளவர்கள் தங்களுடைய மனைவி கணவரை ஸ்பொன்சர் செய்யும் பொழுது குறைந்தளவு வருமானமாக 18,600 பவுண்களைக் காட்டவேண்டும் என்பது போன்று EEA நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கணவர் மற்றும் மனைவி உறவினர்களை ஸ்பொன்சர் செய்யும் பொழுது அல்லது அவர்கள் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கும் பொழுது இந்த விதிமுறையை நிவர்த்தி செய்யவேண்டும் என்று அவர்களுடைய Guidance தெரிவிக்கின்றது. இந்த புதிய Guidance, European Economic Area Regulation 2016 ற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HMRC யினுடைய 2016/2017 Primary Threshhold கிழமைக்கு 155 பவுண்கள் (மாதத்திற்கு 672, வருடத்திற்கு 8060 பவுண்கள்) இருக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றது.

ஆனால் இந்த தொகை வருடத்திற்கு வருடம் மாறுபடலாம். ஆகவே விண்ணப்பங்களை மேற்கொள்பவர்கள் HMRCனுடைய இணயத்தளத்தில் இதனை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

வேலையாட்கள் (Workers), சுயதொழிலில் உள்ளவர்கள் (Self-employed) கர்ப்பிணித் தாய்மார்கள், மாணவர்கள், இயலாத் தன்மையுடையவர்கள் (Disabled) மற்றும் தன்னிறைவு உள்ளோர் (Self-sufficient) போன்றவர்கள் மேலே குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக தெளிவு தேவை என்றால் கீழே உள்ள சட்ட நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

Jay Visva Solicitors
First Floor,
784 Uxbridge Road,
UB4 0RS Hayes
UK
Tell: 0208 573 6673

Comments