9 ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையா பிரித்தானிய பொலிஸாரால் கைது

Report Print Murali Murali in பிரித்தானியா
1725Shares

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யுமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் மல்லையா பிரித்தானியாவில் வைத்து இன்றை தினம் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போதே, அவரை நிபந்தனை பிணையில் விடுதலை செய்யுமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பொதுத் துறை வங்கியில் 9ஆயிரம் கோடி ரூபா கடனை பெற்றுக்கொண்ட விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பி சென்ற நிலையில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

9 ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையா பிரித்தானிய பொலிஸாரால் கைது

இந்திய அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

லண்டன் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர், இன்றைய தினமே வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொதுத் துறை வங்கியில் 9ஆயிரம் கோடி ரூபா கடனை பெற்றுக்கொண்ட விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பி சென்ற நிலையில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments