பிரிட்டனில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கையர்களுக்கு சிக்கல்!

Report Print Samy in பிரித்தானியா
151Shares

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி 25 முதல் 28 வேலை நாட்களுக்குள் அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அகதிகளின் விண்ணப்பங்களை விசாரணை செய்யும் நீதிபதிக்கு குறித்த விண்ணப்பதாரியை நிராகரிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அகதி அந்தஸ்து கோருவோரில் பிரித்தானியாவில் தங்கியிருக்க தகுதியற்றவர்களை உடனடியாக வெளியேற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் ஊடாக அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட வேண்டிய காலமும் குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 100 நாட்கள் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகின்ற நிலைமை நடைமுறையில் உள்ளது.

இந்த புதிய சட்டம் பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீது அதிக தாக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது.

Comments