பிரித்தானிய நாணயத்தின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளதுடன், பங்கு பரிவர்த்தனை சரிவினை சந்தித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
இந்நிலையில், பிரித்தானிய பங்கு சந்தைகளிலும், தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என இன்றைய தினம் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார்.
தற்போதைய பாராளுமன்றின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், பிரித்தானியா பிரதமர் இன்று இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் தெரசே மேயின் இந்த திடீர் அறிவிப்பே பங்கு சந்தையில் தளம்பல் நிலை ஏற்பட காரணம் எனவும், பிரித்தானிய பொருளாதாரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.