பிரித்தானியாவில் 21000 உயிர்களை கொலை செய்ய இலக்கு வைக்கப்பட்டதா? ( Live )

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியா மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலை அடுத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தமது கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Manchester Arena உள்ளக விளையாட்டு அரங்கில் பாரிய குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கிருந்த 21,000 பேர் முட்டிமோதிக் கொண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடினர். விரைந்து செயற்பட்ட பொலிஸார் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் உரிமை கோரவில்லை.

தாக்குதல் இடம்பெறுவதற்கு நான்கு மணி நேரம் முன்பு “அட்டூழியத்தை முன்னறிவிக்க தோன்றியது” என இரண்டு டுவிட்டர் பதிவுகள் பதிவிடப்பட்டிருந்தது.

இதன்போது டுவிட்டர் நிறுவனம் டஸன் கணக்கான கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியது. ஆனால், டெலிகிராம் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட வலைத்தள அமைப்புகள் முழுவதும் ஐ.எஸ் ஆதரவாளர்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஹேஸ்டாக்குகளை உருவாக்கிய அவர்கள், இது போன்று தாக்குதல் சம்பவங்கள் நடக்க வேண்டும். ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த வான்வெளி தாக்குதலுக்கு இது பதிலடி நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Comments