பிரித்தானியாவில் குண்டுத் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு, 59க்கும் அதிகமானோர் காயம்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள மன்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 59 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனவும் கூறப்படுகின்றது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மன்செஸ்டர் விக்டோரியா ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும், அதனூடாகச் செல்லும் சகல ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்திலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments