பிரித்தானியா மன்செஸ்டர் தாக்குதல்: ஒருவர் கைது

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் (Chorlton) பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 59பேர் காயமடைந்துள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் அவர் தன்னிச்சையாகவே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதலுக்கு வீட்டில் உருவாக்கப்பட்ட குண்டு ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த பலர் இன்னும் இனங்காணப்படாத நிலையில், 18 வயது நிரம்பிய ஜோர்ஜினா (Georgina Callander) எனும் பெண் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments