பிரித்தானியா கடும் புயலை எதிர்கொள்கிறது

Report Print Dias Dias in பிரித்தானியா

ஒஃபலியா (Ophelia) புயல் தாக்குதலை அடுத்து இதுவரை மூவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் வெவ்வேறு விபத்துக்களால் ஆணொருவரும் பெண் ஒருவரும் உயிர் இழந்துள்ளனர். இவர்கள் பயணித்த வாகனத்தின் மீது புயற் காற்றால் மரங்கள் வீழ்ந்ததை அடுத்து இவர்கள் உயிரிழந்தனர்.

அத்தகைய விபத்தொன்றில் காயமுற்ற 70 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் உயிராபத்தில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புயலால் விழுந்த மரமொன்றை ஓரம் கட்ட முயற்சித்த வேளையில் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த இவரின் வயது 30 .

அத்லாந்திக்கை தாக்கும் ஒஃபலியா (Ophelia) புயல் 1987 இன் பின்னர் இம்முறையே பலமான ஒன்றாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1987 இல் இடம்பெற்ற புயல் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்திருந்தனர்.