லண்டன் நகரில் கத்திக்குத்து தாக்குதல்! ஒருவர் பலி இருவர் படுகாயம்

Report Print Murali Murali in பிரித்தானியா

மேற்கு லண்டன் நகரில் அமைந்துள்ள பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையம் அருகே இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுயகாமடைந்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையம் அருகே இன்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தீவிரவாத தாக்குதலும் தொடர்புடையது அல்லவெனவும், சம்பவம் தொடர்பில் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரையும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த மாதம் லண்டன் நகரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 30 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.