பவுண்டின் பெறுமதி திடீரென அதிகரிப்பு!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

சமகால பெறுபேறுகளின் அடிப்படையில் பிரித்தானிய பவுண்டின் பெறுமதி அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் பிரித்தானிய பவுண்ட் மதிப்பு அதிகரித்து காணப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் யூரோவுடன் மதிப்பிடும் போது ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி 1.1218 அளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இந்தாண்டில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான சாதனமான நிலைப்பாட்டின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை 1.1220 வரை பவுண்ட் மதிப்பு அதிகரித்து காணப்பட்டுள்ளது.

பிரித்தானிய வங்கியினால் எதிர்பார்க்கப்படும் வட்டி விகித உயர்வுக்கு வர்த்தகர்கள் திட்டமிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் டிசம்பர் மாதம் பிரெக்ஸிட் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதால் பவுண்டின் பெறுமதி வலுவடைந்து வருவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 மாதங்களாக யூராவுக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி பாரிய சரிவை சந்தித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.