பிரித்தானியாவில் அசத்தும் இலங்கை புலிக்குட்டிகள்!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் புலிக் குட்டிகளுக்கு பெயர் வைக்கும் விசித்திர போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பான போட்டி பிரித்தானிய நோபொக் பிராந்தியத்தில் வித்தியாசமான போட்டி ஒன்று இடம்பெற்று வருகின்றது.

பென்ஹெம் மிருகக்காட்சிசாலையில் பிறந்த இலங்கை புலிக்குட்டிகள் இரண்டிற்கு பெயர் வைக்கும் போட்டியே நடத்தப்பட்டு வருகின்றது. இந்தப் போட்டி இன்றையதினம் முடிவுக்கு வருகிறது.

இலங்கை புலிக்குட்டிகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பிறந்துள்ளது.

இந்த சம்பவம் மிருகக்காட்சி சாலையில் விசேட சம்பவமாக கருதப்படுவதாக முகாமையாளர் மைக்கல்ல் வுல்ஹெம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய காடுகளில் ஆயிரத்திற்கும் குறைவான இலங்கை புலிகளே உள்ளமையினால் இந்த புலிக்குட்டிகள் தொடர்பில் சர்வதேசத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த குட்டிகளின் பெற்றோர் பல வருடங்களாக அந்த மிருகக்காட்சி சாலையில் வாழ்கின்ற போதிலும் குட்டிகளை பிரசவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.