லண்டனில் தந்தையை கொலை செய்ய முயன்ற ஆசிய இளைஞன்

Report Print Evlina in பிரித்தானியா

பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தையை கொலை செய்ய முயன்றதால் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரை பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்ஜித் சிங் ரந்தாவா என்ற இளைஞர் தனது தந்தையுடன் லண்டனில் வசித்து வந்த நிலையில் லண்டனைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு குர்ஜித்தின் தந்தை மறுப்பு தெரிவித்ததன் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் தனது தந்தையை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த நபர் கார் வெடிகுண்டை ஒன்லைனில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த லண்டன் தேசிய குற்றப்பிரிவு அதிகாரிகள் போலியான வெடிகுண்டு ஒன்றை மாற்றி வைத்துள்ளனர்.

அத்துடன், அந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது எனவும், அவர் அதை வெடிக்கச் செய்திருந்தால் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் லிவர்ஃபுல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.