லண்டனில் இலங்கையின் தூதரகத்தின் முன் சுதந்திர கொண்டாட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

புலிக்கொடிகளை ஏந்தியவாறு பல்கோரிக்கைகைள முன்வைத்து கோசம்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் புலம்பெயர் வாழ் தமிழர்களினால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டு வருகின்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்றுதிரண்ட அவர்கள் புலிக்கெடிகளை கைளில் ஏந்தியவாறு இலங்கையில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழரின் பாரம்பரிய பறை இசையின் முழக்கத்துடன் காணாமல் போன எமது உறவுகள் எங்கே? எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பிய பட எதிர்ப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.