லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் நேர்ந்த அனர்த்தம்!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

லண்டன் ஹித்ரோ விமான நிலைய ஓடுபாதையில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு விமான நிலைய வாகன சாரதிகள் ஓட்டிய வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த 40 வயதுடைய நபர் மேற்கு லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால் விமான பயணங்கள் சில தாமதமாகியுள்ளதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஒரு விமானம் தரையிறங்க ஒரு மணித்தியாலம் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.