பிரித்தானியாவில் நெருக்கடியை ஏற்படுத்தும் புதிய கட்சி!

Report Print Murali Murali in பிரித்தானியா
407Shares

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதனை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், அதற்கு ஆதரவாக 52 வீதமான மக்கள் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து, பிரதமராக இருந்த மேவிட் கெமரூன் பதவி விலகி, புதிய பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு இன்னும் 13 மாதங்களே இருக்கின்றன.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதனை தடுப்பதற்கு அந்நாட்டின் புதிய அரசியல் கட்சியொன்று தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட “தி ரினிவ்” கட்சியே இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதனால் பிரிடெக்ஸ் மூலம் நன்மை கிடைக்காது என அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2ம் உலக போருக்கு பின்னரான காலப்பகுதியில் பிரித்தானியாவின் மிகப் பெரிய தவறாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது கருதப்படும் என அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.