என்னைப் போன்ற பெண்ணை ஊடகங்களில் பார்த்திருக்கிறீர்களா : மனதைத் தொடும் இலங்கை மொடல்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

குறையுடையோருக்கும் வாய்ப்பளிக்கும் Ugly Models என்னும் ஃபேஷன் அமைப்பில் பங்கேற்ற Sheerah Ravindren (22) என்னும் இலங்கை மொடல் தனது தன்னம்பிக்கை வார்த்தைகளால் மனங்களைத் தொட்டிருக்கிறார்.

1.61 மீற்றர் உயரமே உடைய சிறிய உருவம் கொண்ட Sheerah, ”நான் போர்க்குணம் கொண்ட புலம்பெயர் மொடல்” என்று கூறியுள்ளார்.

Baggy jeans மற்றும் கருப்பு topக்கு நடுவே தெரியும் தட்டையான வயிறு மட்டுமின்றி, வலது மூக்கில் அணிந்துள்ள மூக்குத்தியும் அவரது நேர் மறை எண்ணங்களும் கூட காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன.

“இன்னும் வளரும் வண்ணங்களின் மங்கை நான்” என்னும் Sheerah, ஊடகங்களிலோ ஃபேஷன் துறையிலோ என் போன்றவர்களை நான் இதுவரை கண்டதில்லை” என்கிறார்.

மிக நீண்ட கழுத்தோ, பெரிய கன்னங்களோ, அகன்ற காதுகளோ எப்படியிருந்தாலும் Ugly Models என்னும் இந்த லண்டனிலுள்ள ஃபேஷன் அமைப்பு அவர்களையும் வரவேற்கிறது என்பது குறிப்பிடத்தக்க விடயம் மட்டுமில்லை மனதைத்தொடும் விடயமுமாகும்.

nationmultimedia