இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

Report Print Evlina in பிரித்தானியா

கடந்த சில தினங்களாக இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கண்டியில் கடந்த நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மோதல்கள் இடம்பெற்ற நிலையில் 20 வரையிலான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாடுகளில் மட்டுமின்றி உள்ளூரில் சிலப் பகுதிகளில் இதனை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.