பிரித்தானியாவில் ஈழத்து தமிழ் தம்பதிக்கு கிடைத்த நீதி! பல மில்லியன்கள் நஷ்ட ஈடு

Report Print Ajith Ajith in பிரித்தானியா

பிரித்தானியாவில் இலங்கை குழந்தைக்கு நேர்ந்த கதிக்கு காரணமான வைத்தியசாலை அந்த குழந்தையின் பெற்றோருக்கு பல மில்லியன் பவுண்டுகளை நட்டஈடாக செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாதியரின் கவனக் குறைவு காரணமாக இலங்கை அகதி தம்பதியினரின் குழந்தை ஒன்றுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நஷ்டஈடாக பல மில்லியன் பவுண்டுகளை செலுத்தமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் நஷ்டஈடு எந்தளவு தொகை என்பதை நீதிபதிகள் விரைவில் அறிவிக்கவுள்ளனர்

2008ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கையின் அகதி தம்பதியினரின் குழந்தை ஒன்றுக்கு பாலூட்டல் தொடர்பாக உரிய அறிவுரைகளை தாதியர் வழங்கவில்லை.

இலங்கையின் குறித்த தமிழ் தாய்க்கு ஆங்கில அறிவு போதுமானதாக இல்லாத நிலையில் அவரால் தாதியர் கூறிய அறிவுரைகளை பின்பற்றமுடியவில்லை.

இதன்போது தாதியரும் குறித்த இலங்கை தாய்க்கு புரியும் வகையில் செயற்படவில்லை என்று நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ளார்.

நிலூஜன் என்ற இந்தக் குழந்தை 8 வருடங்களுக்கு முன்னர் பிறந்தது முதல் தொடர்ந்தும் அழுதுக்கொண்டிந்த போதும் அதனை தாதியர் கவனத்தில் கொள்ளவில்லை.

இலங்கையின் தாய்க்கு ஆங்கில அறிவு புரியவில்லை என்ற காரணத்தை காட்டி தாதியர் அவருக்கு பாலூட்டல் தொடர்பில் உரிய அறிவுரைகளை வழங்கவில்லை. அத்துடன் விரைவிலேயே குறித்த குழந்தையையும் தாயையும் வைத்தியசாலை நிர்வாகம் வீட்டுக்கு செல்ல அனுமதித்தது.

இந்தநிலையில் பாலூட்டல் மற்றும் போசனைக் குறைப்பாடு காரணமாக குறித்த குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

எனவே வைத்தியசாலை நிர்வாகம் பல மில்லியன் பவுண்ட்ஸ்களை குழந்தையின் பெற்றோருக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு தொடர்பில் கருத்துரைத்துள்ள தனியார் வைத்தியசாலையின் நிர்வாகம், தீர்ப்பை ஏற்று நட்டஈட்டை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவம் 2008ஆம் இடம்பெற்றபின்னர் தமது வைத்தியசாலையில் மொழிப்பெயர்ப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.